யாழில் தூய தேன் எனக் கூறி சீனிப்பாணியை விற்பனை செய்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் தூய தேன் எனக் கூறி சீனிப்பாணி கரைசலை விற்பனைக்கு வைத்திருந்ததும், கலப்பட நெய்யை விற்பனை செய்திருந்ததும் தொடர்பில் விற்பனையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போத்தல்களில் சீனிப்பாணி கரைசல் காணப்பட்டதையடுத்து 19 மற்றும் முக்கால் போத்தல் சீனிப்பாணி கரைசல்கள் கைப்பற்றப்பட்டன.

அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8 மற்றும் கால் போத்தல் நெய் போத்தல்களும் கலப்படம் கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் விற்பனையாளரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *