சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து 2026 மார்ச் 04 ஆம் திகதி அம்பாறை சம்மாந்துறை பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 200 சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தீகாயு, சம்மாந்துறை பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்து, சம்மாந்துறை நகரில் 2026 மார்ச் 04 ஆம் திகதி நடத்திய இந்த கூட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான ஒருவர் சோதனையிடப்பட்டவேளையில் அவரிடமிருந்து சுமார் 200 சட்டவிரோத மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபரும் போதை மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *