காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று முன்தினம்(08) பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரீட், ஐ வெயார் நிறுவனத்தின் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, “அகன்று செல்” எனும் போதைப்பொருள் தேசிய செயற்றிட்ட விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட இணைப்பாளர் தினேஸால் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் ” பெண் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்திற்கு பெருமை ” எனும் தொனிப்பொருளிலான மகளிர் தின சிறப்புரையினை சட்டத்தரணி குமாரவேல் புருசோத்மன் வழங்கினார்.

இந் நிகழ்வில் பிரதேச மட்டத்தில் சிறந்த பெண் தொழில் முயற்சியாளராக முதலாம் இடத்தில் ஸஹ்றா மற்றும் இரண்டாம் இடத்தில் நுஸ்பா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான சான்றிதழ்கள் பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *