மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுதுளி நிகழ்வு

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களிடையே காணப்படும் திறமைகளை வெளிக்கொணரும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சிறுதுளி நிகழ்வு அண்மையில் (05) நடைபெற்றது.

மண்முனைப்பற்று முன்நாள் பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயமால் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வந்து இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்தது, அதற்கு புத்துயிர் கொடுக்கும் வண்ணம் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளரின் கலை கலாசார விழுமியங்களை மீட்டெடுத்து இலைமறை காய்களாய் இருக்கும் அனைத்து திறமைகளையும் மேடைக்கு கொண்டுவரவேண்டும் எனும் தீராத கண்டிப்புடனான முயற்சியினால் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ், உதவிப் பிரதேச செயலாளர் இளம்குமுதன். பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் சுதர்ஷன், நிர்வாக உத்தியோகத்தர் தவேந்திரன், பிரதேச செயலக கலைஞர்கள்  மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அதனை நிர்வாகக் கிளை உத்தியோகத்தர்களின் வரவேற்பு நடனத்தினைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் பல இசைநிகழ்வுகளும் இடம்பெற்றன. பல இலைமறை காய்களாக இருந்த உத்தியோகத்தர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டது. இதில் பல உத்தியோகத்தர்களின் கன்னி முயற்சியும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வுகள் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் எனவும் உழைத்து ஓய்ந்து களைத்த ஊழியர்களின் மன சந்தோசத்திற்காகவும் புத்துணர்வு ஊட்டும் வண்ணமும் கலை இலக்கிய இசை நடன நாட்டார் வழக்கு கதைகூறல் போன்ற அனைத்தையும் அடங்கியதாக இந்நிகழ்வு அமையவேண்டும். நிகழ்வுகளின் தன்மையை பொறுத்து நேர ஒதுக்கீட்டை அமைத்துக்கொள்வதாகவும் இன்னும் கன்னி முயற்சியாளர்களின் முயற்சியும் வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *