காத்தான்குடி பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு நேற்று(09) ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில்
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுட் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலின் பிரதம பேஷ் இமாம் அஷ்ஷெய்க் இல்ஹாமால் நோன்பின் மகத்துவமும், பண்பாடும் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சில்மியா, கணக்காளர் முப்லி,  பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தனுஜா, நிர்வாக உத்தியோத்தர் றஊப், நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஜரூப்,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர்களான  பரீட், பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமையாளர்கள், சேவிங்ஸ் சுப்பர் மார்கட்டின் இயக்குனரும் சமூக செயற்பாட்டாளருமான சாமில் அதன் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கான அனுசரணையை சேவிங்ஸ் சுப்பர் மார்கட் மற்றும் அங்கர் நிறுவனங்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *