அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் கடமையைப் பொறுப்பேற்பு

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று(12) காலை 09.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.

கண்டி மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தினை சேர்ந்தவராவார். இவர் கல்முனை, மகாஒயா, உகண, பதியத்தலாவ மற்றும் திகன ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், அனுராதபுரம் மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையேறியுள்ளார்.

இவர்  இறுதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன், அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *