வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 2026ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று(11) பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் தின நிகழ்வு மற்றும் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றன.
பிரதேச செயலாளர் முபாறக் தலைமையில் “பெண்களின் தலைமைத்துவம், செழிப்பான தேசத்தின் பெருமை” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திம்புலாகல பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கைருன்னிஸா, விசேட அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக புவியியல் துறைக்கான விரிவுரையாளர் நுஸ்கியா ஹசன், பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஜுமானா ஹஸீன், கணக்காளர் சஜ்ஜாத், கெளரவ அதிதியாக மட்டக்களப்பு இளம் பெண்ணியக் குழுவின் வட்டப் பிரிவு பணிப்பாளர் அஜானி காசிநாதர், செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகளிர் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

