மட்டக்களப்பு மாவட்டம் – வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதி காணிகளுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்க வாகரை பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என வாகரை பிரதேச சபை உறுப்பினர் கைதர் தெரிவித்தார்.
காணி அபிவிருத்தி செய்த நபர்களுக்கு இவ் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.
அந்தவகையில், கேணிநகர், காரமுனை பழைய கிராமம், ஆலங்குளம் மற்றும் வாளமண் கேணி ஆகிய கிராமங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாத காலப்பகுதிக்குள் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்க பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என கைதர் மேலும் தெரிவித்தார்.
இந்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிரதேச செயலாளருக்கு கிராம மக்கள் சார்பாக தனது நன்றிகளை பிரதேச சபை உறுப்பினர் கைதர் தெரிவித்துள்ளார்

