மண்முனைப்பற்று பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரையம்பதி சிகரம் ஜும்ஆ பள்ளிவாசலில் இன நல்லுறவை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு நேற்று(11) நடைபெற்றது.
எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, சமூகங்களுக்கிடையில் ஐக்கியம், சமாதானம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது மண்முனைப்பற்று பல்சமய ஒன்றியத்தின் தலைவர் ஆதம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை அன்டனி ஜெயராஜ், மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை றூக், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள், சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உதயகாந்த், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச பல் சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

