யாழில் வன்முறைக் கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்

வன்முறைக் கும்பலொன்று யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பேருந்து, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள் மற்றும் பட்டா ரக வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அவற்றிக்கும் தீ வைத்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, அவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்கள் என்பவற்றையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *