காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார்.

 

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ் மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று(15) நடைபெற்றது.

 

இந்நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இந் நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், யாழ் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *