பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1220 லீற்றர் பெட்ரோல் மற்றும் 530 லீற்றர் டீசல் பறிமுதல்

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியில் தனியார் ஒருவர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1220 லிட்டர் பெட்ரோல் மற்றும் 530லீற்றர் டீசல் என்பவற்றை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிசார் குறித்த எரிபொருளை பறிமுதல் செய்துள்ளதுடன் குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளில் எரிபொருள் பறி முதல் கிளிநொச்சி  போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்247 லீட்டர் டீசலும் இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  1220 லிட்டர் பெட்ரோல் மற்றும் 530 லிட்டர் டீசல் மொத்தமாக1220 லிட்டர் பெட்ரோல் 807 டீசல் என்பனவற்றை போலீசாரின் திடீர் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *