வடமோடிக் கூத்துத் திருவிழா

மட்டக்களப்பு – கல்லடி சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையும், அன்புநெறிக் கலை மன்றமும் இணைந்து நடாத்தும் வடமோடிக் கூத்துத் திருவிழா 01 திகதி புதன்கிழமை மாலை 04.30 மணியளவில் கல்லடி விஷ்ணு ஆலய முற்றத்தில் இடம்பெறவுள்ளது.

“ஆளுமையான ஔவையாள்” என்னும் வடமோடிக் கூத்தின் சதங்கையணி விழா எதிர்வரும் 01 ஆம் திகதி புதன்கிழமை மாலை 04:30 மணியளவில் கல்லடி விஷ்ணு ஆலய முற்றத்திலும், முதலாவது அரங்கேற்ற விழா 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கல்லடி வேலாயுத சுவாமி ஆலயத்தின் மண்டலாபிஷேக விழாவும் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

 

இக்கூத்துக்களை கல்லடி, நொச்சிமுனை, நாவற்குடா பிரதேச இளைஞர் மற்றும் யுவதிகள் பங்கேற்கவுள்ளனர். இவர்களுக்கான கூத்து பயிற்சிகளை மட்டு. நகரைச் சேர்ந்த சி.ஞானசேகரம் அண்ணாவியாரும், நாடகத்துறை விரிவுரையாளருமான து.கௌரீஸ்வரன் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *