தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை இல்லை என சுயநலவாதிகள் எங்களை ஒரு பிரித்த ஒரு இனமாக காட்ட முயல்கின்றனர் – சாணக்கியன்

தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று சொல்லியே எங்களுக்குள் ஒரு பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சுயநலவாதிகள் எங்களை ஒரு பிரித்த ஒரு இனமாக காட்ட முயல்கின்றனர் எனவே தமிழ் மக்களின் அபிலாஷைகளான சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு வேண்டும் என்ற விடையத்தில் தமிழ்தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் நேற்று செவ்வாய்க்கிழமை(31) தந்தை செல்வா பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி அனுஸ்டிக்கப்பட்டது இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

தந்தை செல்வா பற்றி பல விடையங்கள் பேசப்பட்டது குறிப்பாக தமிழரசு கட்சியின் அரசியலை பார்க்கும்போது அடிக்கடி முகநாலில் பார்க்கும் விடையம் தந்தை செல்வா சொன்னதாக இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று உண்மையில் தந்தை செல்வா எதற்காக எப்போது சொன்னார் என பலருக்கு தெரியாது.

 

அந்த காலப்பகுதியில் இருந்த இளைஞர் பேரவை தமிழரசு கட்சியில் சேர்ந்து பயணித்த பலர் இன்றும் மாவட்டத்தில் இருக்கின்றனர் அன்று எனது பாட்டன்  இராசமாணிக்கம் தலைவராக இருக்கும் போது தந்தை செல்வா இந்த மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக்கு வந்தபோது இராசமாணிக்கம் ஜயா தேர்தல் பரப்புரைக்கு போக கூடாது என அவருக்கு செருப்பு மாலை போட வேண்டும் என பேசியவர்கள் எல்லாம் இன்று மாவட்டத்தில் தேசியவாதிகளாக பலரால் காட்டப்படுகின்றனர்.

 

உண்மையில் தமிழரசு கட்சியில் அந்த காலம் தொடக்கம் இந்த காலம் வரைக்கும் இருந்து தமிழரசுக் கட்சியை வளர்த்து இளைஞர் பேரவையில் இருந்தவர்களை கேட்டால் தந்தை செல்வா எதற்காக சொன்னார் என்று பலரால் புரிந்து கொள்ள முடியும் அவர் எதற்காக சொன்னர் என்று சொன்னால் 70 ம் ஆண்டு தேர்தலில் சிறிமாவே பண்டார நாயக்காவுக்கு அதிகூடிய பெரும்பான்மை கிடைத்தது.

 

1972 ம் ஆண்டு தமிழரசுக் கட்சியின்  தந்தை செல்வநாயகம் உட்பட தலைவர்கள் சிறிமாவே பண்டார நாயக்கா 70 தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த பல விடையங்களை புறந்தள்ளி முழுமையாக பெரும்பான்மையினரின் ஆதரவுடன் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வந்தது

 

அப்போது செல்வா சொன்னார் எங்களின் பங்களிப்பு இல்லாமல் பெரும்பான்மை சமூகம் தீர்மானங்களை  எங்களுக்கு எதிராக முன்னெடுத்து எடுத்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் ஒரு சூழல் வந்திருக்கு அதனால் இனி தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றாh.; அது மட்டுமல்ல எங்களுடைய மண்ணும் மக்களும் இந்த இரண்டையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றார்

 

எனவே இந்த இரண்டையும் எப்படி பாதுகாக்க வேண்டும் என்றால் உதாரணமாக மயிலந்தனை மடுவை நாங்கள் களத்தில் இருந்து எதிர்த்து சண்டைபிடித்து ஆர்ப்பாட்டம் செய்து வழக்கு போட்டு நிறுத்துவது என்பது ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல

 

இன்று இந்த அரசாங்கத்தில் மயிலத்தனைமடு எப்படி பிரச்சனை வந்ததே இன்று கியூ ஓயா திட்டம் வந்திருக்கிறது எனவே இந்த நிலத்தை பாதுகாப்பது இந்த அரசியல் அமைப்பின் ஊடாக அந்த நில அதிகாரம் தமிழர்களுடைய கையில் இருந்தால் மாத்திரம் தான் எங்கள் நிலத்தை பாதுகாக்க முடியும் இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் எங்கேயோ ஒரு மாவட்டத்தில் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தான் இப்போது இதை தடுத்து வைத்திருக்கின்றோம் எனவே ஒரு நிரந்தரமான அரசியல் தீவு மூலம்தான் நாங்கள் அடையலாம்.

 

தொல்பொருள் பிரச்சனை மகாவலி அதிகார சபை பிரச்சனை வனவரிபாலனசபையின் அடாவடி உட்பட பல அரச திணைக்களங்கள் எங்கள் நில அபகரிப்பை செய்வதை தடுக்க புதிய அரசியலமைப்பின் ஊடாக மாத்திரம் செய்யலாம்

 

மக்களை பாதுகாப்பதற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் எங்களுடைய இளைஞர்களை இந்த நாட்டில் தக்கவைத்துக் கொள்ளலாம் 2013 நான் அரசியலில் ஈடுபட்ட போது என்னை அதிகமாக சந்திக்க வருபவர்கள் வேலைவாய்ப்பை கேட்டு வருவார்கள்  2020 குறிப்பிட்ட அளவு இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு வந்தார்கள் இன்று வெளிநாட்டுக்கு போன உறவுக்கான கடிதம் கேட்டு வருவார்கள் அல்லது வெளிநாட்டுக்கு எப்படி போவது என கேட்டு வருவார்கள் எனவே இன்று நாட்டில் இளைஞர்கள் வாழக்கூடிய சூழல் இல்லை

 

விலைவாசி அதிகரிப்பு மின்சாரம் 25 வீதத்தல் அதிகரிப்பு உலக சந்தையில்; இருக்கின்ற பிரச்சனை காரணமாக இருந்தால்கூட எரிபொருள், எரிவாயு, பசளை,  அதிகரித்துள்ளது  ஆனால் அதற்கு நிகராக ஒருவரின் சம்பளம் அதிகரிக்குமா? இல்லை  என்னுடன் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கம் எண்ணம் எனக்கும் இல்லை கஷ்டம் என்ன செய்வது. அப்போது அரசாங்கம் எப்படி செய்வது?

 

இப்படியான நிலையில் எங்கள் மக்களை இளைஞர்களை எப்படி தக்க வைத்துக் கொள்ளலாம் என சொல்லி ஒரு சிந்தனையை முன் வைத்தால் கூட எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியொழுப்புவதன் மூலம் மாத்திரம் தான் முடியும்

 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து அதிகூடிய உள்ளுராட்சி மன்றம் எங்கள் கைவசம் இருந்தும் கூட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகைப்படுத்தி வந்த போதும் அதற்கு அரசாங்கத்தில் இருக்கின்ற  சில அரச அதிகாரிகள்; தடையாக இருக்கின்றனர்.

 

மாகாணசபை முறையை ஒரு நிரந்தரமான தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதற்கு முக்கியமான காரணம் அந்த தேர்தல் நடந்தால் தனிய ஓரு ஆளுநரின் அதிகாரத்தில் இருக்காது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பார்கள் அரச அதிகாரிகள் மாகாணத்தில் இருப்பவர்கள் ஒரு உள்ளுராட்சி மன்றத்தை சுயாதீனமாக இயங்க வைப்பதற்கு  ஆளுநர் தடையாக இருக்காது இதற்காகத்தான் மாகாணசபை தேர்தலை கோருகின்றோம்.

 

நிரந்தரமாக ஒரு அரசியல் தீர்வு வரும்வரைக்கும் இலகுவாக பறித்தெடுக்க கூடியது பழமாக மாகாணசபை தேர்தல் ஒரு ஏணி வைத்து பறிக்க கூடிய பழமாக புதிய அரசியல் அமைப்பு இருக்கின்றது எனவே அந்த வகையில் உடனடியாக மாகாணசபை தேர்தல் வைக்க வேண்டும் மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதாக இருந்தால் புதிய அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் இதை அடைவது எப்படி குறைந்த பட்சம் ஒரு வேலைத் திட்டத்திற்கு எல்லா கட்சிகளும் இணைய வேண்டும் என்றார்

 

இது வேடிக்கையான விடையம் ஒற்றுமையைப் பற்றி பேசும்போது இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனியாக கேட்க வேண்டும் என்பதிலே அதிகளவானவர்கள் உறுதியாக இருந்தனர். கிழக்கு மாகாணத்தில் பிரிந்துபோன கட்சிகளுக்கு பெருமளவு ஆதரவு கிடைக்காதலால் பிரிந்துபோன கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைக்க பெரியளவில் செய்ய முடியாமல் போனது.

 

வடமாகாணத்தில் அப்படியல்ல சங்கும் தமிழரசு கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கின்றனர். ஒரு புறம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றனர் இன்னொரு புறம் ஒற்றுமையாக உரிமையைப் பற்றி பேசும் போது இவர்தான் ஒட்டுக்குழுக்களுடன் பயணிக்க பார்கின்றார் தங்களுக்கு தேவை வரும் போது சேர்ந்து இயங்க வேண்டும் தங்களுக்கு தேவை இல்லாத போது சேர்ந்து இயங்க கூடாது இதனை எப்படி நடை முறையில் கொண்டுவருவது

 

ஒருபுறம்; ஜனநாயக தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சி சில பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் இந்த இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால் வடக்கு கிழக்கிலே பெருமளவாக அரசியலில் ஈடுபடுகின்ற கட்சிகள் எல்லாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தவிர்த்து எல்லோரும் ஒரு குடைக்குள் வந்துவிடுவார்கள்

 

அரசியல் அமைப்பு தொடர்பாக கொழும்பு சட்டதரணிகள் சங்கம் முயற்சி எடுத்துள்ளனர் எல்லா கட்சியையும் இணைத்து ஒரு ஆவணம் தயாரிப்பது என நாங்கள் அரசுக்கு ஒரு ஆவணம் வழங்குவதாக இருந்தாhல் அரசாங்கம் அரசியல் அமைப்புக்குரிய பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போது தான் அரசுக்கு நாங்கள் வழங்கவேண்டும் அரசினுடைய அபிலாஷை நாங்கள் அறிய வேண்டும் நாங்கள் சென்று இதுதான் வேண்டும் என சொன்னால் அது குறைந்தபட்டம் தந்தால் அதை நாங்கள்  என்ன செய்வது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *