தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு கிரான் கருணா ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அன்னையின் நினைவு நாளை நினைவு கூறும் முகமாக தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பிலும் இவ் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக அன்னையின் மகளான சாந்தி லோகேஸ்வரனால் ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

காலை பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. மாலை மைதான விளையாட்டு நிகழ்வுகளான சாயமுட்டி உடைத்தல், சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம் மற்றும் கயிறு இழுத்தல் என பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்னை தேச விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன்னை உயிர் தியாகம் செய்த வரலாறு தொடர்பான கவிதைகள் மற்றும் பேச்சு என்பன அரங்கில் உணர்வுப் பூர்வமாக நிகழ்த்தப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *