மட்டக்களப்பு, கல்லடி வேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்ற குற்றச்சாட்டில் 105 போத்தலுடன் பெண் ஒருவரை இன்று (09) கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மட்டக்களப்பு தலைமையக பொறுப்பதிகாரி ஜி.ம்.பி.ர பண்டார தலைமையிலான குழுவினர் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

