கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 17-04-2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு கடற்படையினரால் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 10இந்திய மீனவர்களையும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் .இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் முற்படுத்தியபோதே குறித்த 10மீனவர்களையும் எதிர்வரும் 17-04-2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

