மட்டக்களப்பில் நிலைபெறுதகு விவசாய நிகழ்ச்சி திட்டம் நடைமுறை

விவசாய அமைச்சினால் 2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் நிலைபெறுதகு விவசாய நிகழ்ச்சி திட்டம் – விவசாய கடன் திட்டம் தொடர்பாக விளக்கங்கள் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஏன்.ஏப்.ஏ.சனீர் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (09) இடம் பெற்றது.
இதன் போது விவசாய அமைச்சின்பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்(SAPP)  நிகழ் நிலையூடாக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விவசாய கடன் திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

விவசாய துறையில் அல்லது விவசாய பெருமான சங்கிலிகளுடன் தொடர்புடைய பயிரிடல் தொழில் முயற்சி  அல்லது  வணிகத்தில் ஈடுபடுபவராக இருந்தால் 5% குறைந்த வட்டியில் கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *