மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் சுமார் 1.1 மில்லியன் இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் வேலைவாய்ப்பு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்த மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுக்கும் அதன் அரசுகளுக்கும் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
அதேவேளை மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்தும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கிலுள்ள அரபு நாடுகளை இலக்காகக் கொண்ட அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துமாறு ஈரானை இந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நிலைத்தன்மையில் முக்கிய பங்காற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களையும் வேலைவாய்ப்பு வழங்குநர்களையும் பாதுகாப்பது மிக அவசியம் என அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


