மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 58 வயது குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரைப் பொருத்த முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *