மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

”பராபவ” புத்தாண்டை முன்னிட்டு இன்று (14) மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டு ”பராபவ” வருடப்பிறப்பு இன்று காலை 8.40 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 9.32 நிமிடத்துக்கு பிறந்துள்ளது.

 

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில் காலை வழிபாடுகள் நடைபெற்றன.

 

இதன்போது 108 சங்காபிசேகத்தை தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *