பிள்ளையானின் உண்ணாவிரத போராட்டத்தை வலுச்சேர்க்கும் முகமாக நேற்றைய தினம் செய்தியறிந்த மக்கள் சிலர் தாமாகவே முன்வந்து அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கிழக்கு மாகாண விடிவிற்காக குரல் கொடுத்த தலைவருக்காக அணிதிரள்வோம்: சத்யாகிரகப் போராட்டத்திற்கு அழைப்பு
கிழக்கு மாகாண மக்களின் விடுதலைக்காகவும், அப்பிரதேசத்தின் பாரிய அபிவிருத்திக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்ட ஒரு தலைவருக்காகக் குரல் கொடுக்க வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் தற்போது எழுந்துள்ளது.
தலைவரின் அர்ப்பணிப்பும் தற்போதைய நிலையும்:-
பல சதிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில், எமது மக்களின் நலனுக்காகவும் கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காகவும் எவரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சேவை செய்தவர் எமது தலைவர். கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளினால் ஐந்து வருடங்களுக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டிருந்த அவர், தற்போது மீண்டும் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது தனக்கு சிறையில் மீறப்படும் அடிப்படை மனித உரிமை மீறல்களை கண்டித்து குரல் எழுப்பும் வகையில், கடந்த ஐந்து நாட்களாக அவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
நீண்ட காலமாக எமக்காகவும் எமது மண்ணுக்காகவும் குரல் கொடுத்து வரும் தலைவருக்காக, இன்றைய தினம் தாமாகவே முன்வந்த பொதுமக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எமது ஆதரவைத் தெரிவித்து அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

