மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் கடந்த 19 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரி கண்டறிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) திகதி காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநாதன் ஜெயகாந் என்பவர் தோட்டத்தில் வைத்து இனம் தெரியாதோரால் அவரை கூரிய ஆயுதங்களால் வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையி பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (21) சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது அவரை உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் 3 முறை அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ப்பட்டுள்ளதையடுத்து இந்த பெருக்கு ஏற்பட்ட காரணமாக உயிரிழந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இவ் துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்துவிட்டு அங்கு எந்த தடையப் பொருட்களையும் விட்டு செல்லாது தப்பி ஓடிய மர்ம நபரை தேடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

