கட்டுப்பாட்டை இழந்து லொறி மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்து விபத்து

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள “தயா லிக்கர் ஷாப் முன்பாக பயணித்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதித் தள்ளியுள்ளது.

லொறி மோதிய வேகத்தில் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி என்பன பலத்த சேதமடைந்துள்ளன.

அதிகாலை நேரம் என்பதால் வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *