வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் முப்பதாவது ஆண்டு மகிழ்வின் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வான மாயச் சித்திரக் கண்காட்சி எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வின் ஆரம்ப வைபவம் எதிர்வரும் மூன்றாம் திகதி காலை 10 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகர், அரசாங்க அதிபர், மாநகர முதல்வர், மட்டக்களப்பு கல்வி வலிய பனிப்பாளர் மாநகர ஆணையாளர் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆகியோரின் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கலந்து கொள்ளுமாறு ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


