காணாமல் போன ஆட்களின் குடும்பங்களை வலுப்படுத்தும் முயற்சிகள் – கிளிநொச்சியில் கலந்துரையாடல்

காணாமல் போன ஆட்களின் குடும்பங்களை வலுப்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கான கலந்துரையாடல், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் Mr.Wijith Rohan அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போன ஆட்கள் தொடர்பான பிரச்சினைகள், குடும்பங்களின் வாழ்வாதார சவால்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருளாதார ஆதரவு வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

 

இதில், காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் கிரிசாந்தி ரத்னாயக்கா, அதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும், கடந்த காலங்களில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உளவியல் ஆதரவு, சட்ட உதவி மற்றும் இழப்பீடு வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

குறிப்பாக, வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள், சிறு தொழில் உதவிகள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் குடும்பங்களை பொருளாதார ரீதியாக நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இத்தகைய கலந்துரையாடல்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளை நேரடியாக அறிந்து, அவர்களுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கான முக்கியமான தளமாக அமைந்துள்ளதுடன், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *