வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) இடம் பெற்றது.

 

நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ் அவர்களினால் இதன் போது உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

 

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ, பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முறைசாரா குடியேற்ற தொடர்பு அதிகாரி சொனியா டக்லஸ் அவர்களால் சட்டவிரோத மனித கடத்தல், பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு , நியாயமான மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு செயல்முறைகள் தொடர்பான தெளிவூட்டல்களை அளிக்கை மூலம் வழங்கினார்.

 

இந் நிகழ்வில் மாவட்ட வெளி்நாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரமணபிரசாந்த், ICMPD நிறுவன ஆலோசகர் எச்.ஜி. சரத் பல்லேகம எனப்  பலரும் கலத்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *