சிறுபோக நெற்செய்கைக்கான உரமானிய கொடுப்பனவு தயார் – சிராஜுன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான 38,274.35 ஹெட்டயர் விளை நிலங்களுக்கான உரமானிய கொடுப்பனவு தயார் நிலையில் உள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தெரிவித்துள்ளார்.

 

மாவட்டத்தில் 16 கமநல சேவைகள் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான உரமானிய கொடுப்பனவு கடந்த வருடம் ஒரு ஹெட்டயருக்கான மானிய கொடுப்பனவு ரூபா 25,000/= வழங்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை ஒரு ஹெட்டயருக்கு ரூபா 30,000/= அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது.

 

இவ் வருடம் விவசாயிகளின் நன்மை கருதி அரச உரக்கம்பனியின் உரங்கள் மற்றும் தனியார் உரக் கம்பனிகளின் உரங்களை கமநல சேவைகள் தினணக்களத்தினுடாக வழங்குவதற்கு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டு வருகின்றது.

 

மேலும் தனியார் உரக்கம்பனிகளின் உரங்களை கம்பனியினால் தீர்மானிக்கப்பட்ட விலைக்கு அமைவாக விற்பனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் போது தெரிவித்தார்.

 

அரச உரக் கம்பனியின் 50kg யூரியா பொதியின் விலை ரூபா 9,900 என தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *