யாழில் கிணற்றில் விழுந்து 19 வயது யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று(02) கிணற்றில் இருந்து 19 வயது யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்படுள்ளார்.

 

ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது-19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றையதினம் கிணற்றினுள் #தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

பின்னர் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *