தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (04) குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

 

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,517.89 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேவேளை, வெள்ளியின் ஒரு அவுண்ஸ் விலை இன்று 72.81 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

 

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை குறைவு காரணமாக, இலங்கையிலும் தங்க விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டலும், சர்வதேச அரசியல் முன்னேற்றங்களும் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *