கிளிநொச்சியில் கிராம மட்ட அமைப்புக்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு வீதி திட்டம் மூலம் புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் வீதி திட்டம் மூலம் பல வீதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நாட்டின் கொவிட் மற்றும் பொருளாதார நிலை காரணமாக தடைப்பட்டிருந்தன.

குறித்த வீதிகளில் சில வீதிகள் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவுபடுத்தும் நோக்குடனும் கிராம மட்ட அமைப்புக்களிடம் கருத்துக்களைக்கேட்டறிந்து கொள்ளும் நோக்குடனும் குறித்த கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வீதி பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *