மட்டக்களப்பில் மனோஹரி மொடியூல் பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை வலுப்படுத்துவதற்கு மனோஹரி மோடியூல் பயிற்சி நெறி உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் கிறின் காடன் மண்டபத்தில் நேற்று(06) இடம்பெற்றது.

 

மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அனுசரனையுடன் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பணியாற்றும் சிறுவர் உரிமை மேம்பாடு, பெண்கள் அபிவிருத்தி, போதைப் பொருள் தடுப்பு, சிறுவர் பாதுகாப்பு, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி ஆகிய துறைசார் உத்தியோகத்தர்களை வலுப்படுத்துவதற்கான மனோஹரி மொடியூல் பயிற்சிகள் உளநல வைத்திய நிபுணரும் மற்றும் மனோகரி மோடியூலின் ஸ்தாபகருமான வைத்தியர் எம்.கணேசன் வளவாளராக கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.

 

இதன் போது உத்தியோகத்தர்களுக்கு பொறாமையினால் ஏற்படும் தாக்கம் மற்றும் அதன் விளைவு தொடர்பான தெளிவூட்டல்களை உளநல வைத்திய நிபுணரும் அனுபவ ரீதியான பகிர்வின் மூலம் தெளிவூட்டியனார்.

 

இந் நிகழ்வில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய திட்ட முகாமையாளர் புஸ்பராணி பிகராடோ கலந்து கொண்டார்.

 

மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையமானது கடந்த 2023 ஆண்டிலிருந்து மாவட்ட செயலகத்துடன் இணைத்து மனோஹரி மோடியூல் பயிற்சிகளை உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *