கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம்; இசை நடனக் கல்லூரியில் சம்பவம்

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடிக் கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட மாணவிகள் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம்(06) இடம்பெற்றுள்ளது.

 

இது பற்றி தெரியவருவதாவது,

 

குறித்த கட்டிடம் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மேல் மாடிக் கட்டிடமாக நிர்மானிக்க திட்டமிட்டு கீழ் பகுதி மட்டும் நிர்மானிக்கப்பட்ட இந்த கட்டிடம் உறுதியானது அல்ல என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று இறுதியாண்டு மாணவிகள் நடன பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாடிக் கட்டிடத்தின் மேல் தரையின் ஒரு பகுதி இடிந்து அவர்கள் மீது வீழ்ந்துள்ளதையடுத்து 3 மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த கட்டிடம் நிர்மானிக்கப்பட்ட தரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதன் எந்திரி கடமையை இராஜினாமா செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *