மட்டக்களப்பு மண்முனை பகுதியில் வேன் தீப்பற்றி எரிவு

கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று மண்முனை பகுதியில் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ள சம்பவம் நேற்று(10)  இரவு இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலை மண்முனை வீதியில் சம்;பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில் கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது வான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீப்பிடித்தது

 

 

இதனையடுத்து அதில் பிரயாணம் செய்தவர்கள் எந்த விதமான பாதிப்பும்  ஏற்படவில்லை எனவும் வான் முற்றாக எரிந்துள்ளதாகவும் தடவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக  அவர் தெரிவித்தார்.

 

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *