கிளிநொச்சியில் நகைகளைத் திருடி வந்த கணவன், மனைவி கைது

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மனவின் ஆலோசனைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் 79718 இலக்கமுடைய ஏக்கநாயக்க வழங்கிய தகவலின் படி விநாயகபுரம் பகுதியில் வைத்து 24வயதான கணவனும் 20வயதான மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

 

கிளிநொச்சி உதயநகர், அம்பாள் குளம், விநாயகபுரம், சாந்தபுரம் கனகாம்பிகைக்குளம் பகுதிகளில் 09வீடுகளில் பகல் நேரத்தில் வீடுகளுக்குள் சென்று திருடிய நிலையில் திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

10பவுணுக்கு மேற்பட்ட நகைகள் மற்றும் ஏனைய பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

சந்தேக நபர்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *