கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் (காற்றழுத்த தாழ்வு மண்டலம்) தொடர்ந்தும் நிலவி வருகின்றது. எனினும், அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இது இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக பலவீனமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

இந்தக் காலப்பகுதியில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மற்றும் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலில் பயணிப்போர் வானிலை அறிக்கைகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *