உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (15) கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 64.75 அமெரிக்க டொலர்களால் (-1.38%) குறைந்து 4,612.61 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இது கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க சரிவாகும்.
இதேவேளை, வெள்ளியின் விலையிலும் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.33 அமெரிக்க டொலர்களால் (-3.93%) குறைந்து 81.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்களின் தாக்கம் உள்ளூர் சந்தையிலும் எதிரொலிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இலங்கையில் ஆபரணத் தங்கத்தின் விலையிலும் அடுத்த நாட்களில் குறைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

