நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப – பள்ளத்தாக்கு வலயத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றின் வான்பாயும் சமவெளிப் பகுதிகளிலுள்ள தாழ்நிலங்களில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கக்கூடிய அதிக அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

