மல்வானை வீட்டை மக்களிடம் ஒப்படைக்க கோரி தொடரும் மாணவர்களின் போராட்டம்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானை வீட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் முன்னெடுத்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, குறித்த வீடு மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், பொதுச் சொத்துகள் மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதுடன், கோஷங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *