கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட புத்தளம் வாஹித் பள்ளி, தாரிக் பள்ளி, அக்ஸா பள்ளி, முள்ளிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும், மணல்தீவு, குட்ஸெட் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பணிகளுக்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் நாகூர் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் உணவுகள் சமைக்கப்பட்டன.

