முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு இன்று(17) வாழைச்சேனை பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
மே12 தொடக்கம் மே18 வரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தோறும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
குறித்த நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூசைகள் நடைபெற்று பொதுசுடர் ஏற்றப்பட்டு நினைவு கூறப்பட்டது.
பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.


