விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் கோட்டமட்ட சிறுவர் மெய்வல்லூனர் விளையாட்டுப்போட்டியில் ஆறுபோட்டியில் பங்குபற்றி ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தையும் ஒரு போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

அவர்களை வரவேற்று கௌவிற்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் பாடசாலை சமுகத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் தம்பிராசா தவராசா தலைமையில் இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், மதகுரு, ஆசிரியர்கள், பெற்றோர் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *