நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு

நாட்டைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும், கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

இன்று (19) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

 

இதேவேளை ஏனைய கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

 

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.

 

இதேவேளை திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடல் பகுதிகள் மிதமான அளவில் இருக்கும்.

 

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *