மட்டக்களப்பில் ‘முழு நாடும் ஒன்றாக’ ஸ்டிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு ஆரம்பம்

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்டத்தில் கிழக்கில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தி விழப்புணர்வு செயற்பாடு நேற்று (18) மட்டக்களப்பு காந்தி பூங்காலில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ்; நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

 

 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் தினேஸ் ஏற்பாட்டில் இடம்பெற்றது

 

 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ்;. பிரதி பொலிஸ் மா அதிபர் பிரதிப் களுபான, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன ஆகியோர் கலந்து கொண்டு வீதியால் சென்ற முச்சக்கர வண்டிகளை நிறுத்தி’ போதைப்பொருள் விற்கின்ற அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’ அகன்று செல்’ எனும் தொனிப் பொருளிலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வை ஆரம்பித்து வைத்தனர்.

 

 

இந்த தேசிய செயற்திட்டத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள 57 பொலிஸ் நிலையங்களில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது

 

 

இதேவேளை இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் போதை பொருட்கள் பாவனை கலாசாரத்தை மக்கள் மத்தியில் இருந்து அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன் வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டுக்கு வரும் விஷ நச்சு போதைப்பொருளை அழித்து வருவதுடன் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து செயல்படும் நபர்களையும் இவ் அரசாங்கம் கைது செய்து வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *