மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு தொடர்ச்சியான தன்சல் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
இதே வேளை நேற்று(12) மாலை ஜெயந்திபுரம் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆஞ்சநேய குழும நிறுவனத்தினால் குளிர்பான தன்சல் நிகழ்வு இடம்பெற்றது.
ஜெயந்திபுரம் பௌத்த மத்திய ஸ்தானத்தின் விகாராதிபதி தட்டபாெல குமாரானந்த தேரர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஜெயந்திபுரம் கண்சிஸ்டி பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள், இராணுவ உயர் அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தன்சல் நிகழ்வில் அதிகளவிலான தமிழ் மக்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


