அம்பாறை – உஹனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பெலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (20) மதிய வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உஹனை, தெமடமல்பெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பர்னாட் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உஹனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

