மலையக மக்களின் காணி உரிமை குறித்து அவசர விவாதம் கோரி பிரேரணை

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக பாராளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துமாறு கோரி, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்று பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் நீண்டகால காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான பழனி திகாம்பரம் மற்றும் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *