இரணைமடு குளத்தில் திலாபியா மீன் பதனிடும் நிலையத்தின் திறப்பு விழா

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கங்களின் நிதியுதவியுடன், சர்வதேச தொழிலாளர் அமைப்பு செயற்படுத்திய திலாபியா மீன் பதனிடும் நிலையத்தின் திறப்பு விழா இன்று(21) நடைபெற்றது.

 

இரணைமடு நன்னீர் மீன் சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியாவில் அமைந்துள்ள நோர்வே தூதரகத்தின் அரசியல் குழு தூதரக செயலாளர் டார்மோட் நூலாண்ட் கலந்து கொண்டு பதனிடும் நிலையத்தை திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் ILO இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ஜோணி சிம்சன், காகில்ஸ் நிறுவனத்தின் குழுமப்பணிப்பாளர் ஹரிதாஸ் பெர்ணாண்டோ, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் செல்வி செகராஜா அகல்யா, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கைலாசபிள்ளை பிரகாஸ், மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜோகநாதன் நிசாந்தன், கிராம அலுவலர் மற்றும் மீனவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *