சாய்ந்தமருதில் வட்சற பியவற – 2026;  “கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்” நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடைய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வட்சற பியவற – 2026 எனும் மேற்படி நிகழ்வு ‘கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூசாவின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் நேற்று (21) இடம்பெற்றது.

 

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் திருமதி எம்.சி. றிப்கா அன்ஸார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஐ. முவாபிக்கா கலந்து சிறப்பித்தார்.

 

கலாசார அதிகார சபையின் செயலாளரும் சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தருமான எம்.ஐ.எம். அஷ்ரப் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டதோடு, கலாசார அதிகாரசபையின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா மற்றும் கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *