சீரற்ற வானிலை; 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர், நேற்று (22) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தற்போது நிலவிவரும் இந்த அனர்த்த நிலைமையினால் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 201 பேர் தற்போது 6 பாதுகாப்பான தற்காலிக தங்குமிட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையினால் 123 வீடுகள் பகுதியளவிலும், 02 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *